• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புண்ணிய கிராம கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பௌதிக மற்றும் ஆன்மீக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
- கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையிலான உறவை பலப்படுத்தி புத்தசாசன அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற "புன்னிய கிராம நிகழ்ச்சித்திட்டம்" ஊடாக ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்துதல் அதேபோன்று அதுசார்ந்த பௌதிக வதிகளை அபிவிருத்தி செய்தலும் எதிர்பார்க்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டில் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 24 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினைப் பயன்படுத்தி நீண்டகால சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் குடிநீர்சாந்த நோய்கள் நிலவும் ஏனைய மாவட்டங்களிலும் கஷ்டத்திற்கு மத்தியில் நடாத்திச் செல்லப்படுகின்ற விகாரைகளை மையமாகக் கொண்டு பாதுகாப்புமிக்க சுத்தமான குடிநீர் வழங்கும் பொருட்டு நீர் வடிகட்டும் இயந்திரங்களைத் தாபிக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக புத்தசாசன அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.