• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேயிலை கைத்தொழிலுக்கான தகவல் தொழினுட்ப முறைமையொன்றை தயாரித்தல் - இலங்கை தேயிலை சபை
- இலங்கை தேயிலையில் காணப்படும் உன்னத தரம் காரணமாக அதற்கு உலக சந்தையில் உயர்விலை உரியதான போதிலும், உற்பத்தி செலவு அதிகரித்தல் மற்றும் வர்த்தக பொருட்களின் விலைகள் உலக மட்டத்தில் குறைவடைதல் காரணமாக தேயிலை தொழிலின் இலாபகரமான நிலை படிப்படியாக குறைந்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலையின் கீழ் இலங்கை தேயிலை ஏற்றுமதியின் எதிர்கால பாதுகாப்புக்கு உயர் நிலையிலான கட்டளைகளை பயன்படுத்துவது அத்தியாவசியமானதாகும். இதற்காக தேயிலை கொழுந்து பறித்தல் முதல் உற்பத்தி, போக்குவரத்து, ஏலம், தரப்பரிசோதனை, கலத்தல், பொதியிடல் மற்றும் ஏற்றுமதி செய்தல் வரையிலான செயற்பாடுகளின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இலங்கை தேயிலைச் சபையினால் மேற்பார்வை உட்பட பின்னூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது ஆவணங்கள் சார்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த நடவடிக்கைகளை மிக வினைத்திறமையுடன் செய்யும் நோக்கில் தகவல்தொழினுட்ப முறைமையொன்றை 220 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.