• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"Acland House” மாளிகையை உயர் தரத்திலான வசதிகள் உட்பட சேவைகளை வழங்கும் சிறிய ஹோட்டல் ஒன்றாக (Boutique Hotel) அபிவிருத்தி செய்தல்
- அந்நிய ஆத்திக்கத்துக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கை ரைபல் படையணி உத்தியோகத்தர்களின் உணவகமாக நிருமாணிக்கப்பட்டிருந்த இரண்டுமாடி கட்டடமான "Acland House” கட்டடம் தற்போது படிப்படியாக சேதமடைந்து வருகின்றதோடு, அதன் பழமைவாய்ந்த தன்மையை பாதுகாக்கும் விதத்தில் மறுசீரமைக்கும் மற்றும் நவீனமயப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக இந்தக் கட்டடத்தை உயர்மட்ட சுற்றுலா பயணிகளையும் விசேட வருகையாளர்களுக்காக உயர் தரத்திலான வசதிகள் உட்பட சேவைகளை வழங்கும் சிறிய ஹோட்டல் ஒன்றாக (Boutique Hotel) அபிவிருத்தி செய்து முகாமிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.