• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேற்குப் பிரதேசத்தில் நிருமாணிக்கப்படவுள்ள உத்தேச ஐந்து இலகுரக புகையிரத போக்குவரத்து பாதைகள் பற்றிய சாத்திய தகவாய்வொன்றை மேற்கொள்தல்
- மேற்கு பிரதேசத்திலும் அதற்கு அண்மித்த பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி பணிகள் காரணமாக உருவாகி வரும் எதிர்கால போக்குவரத்து தேவைக்கு ஏற்ற வெற்றிகரமான நீண்டகால தீர்வொன்றாக ஏழு (07) இலகுரக புகையிரத போக்குவரத்து பாதைகளை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பாதைகளை நிருமாணிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்தக் கருத்திட்டத்தின் மீதி ஐந்து (05) இலகுரக போக்குவரத்து பாதைகள் சார்பில் முதலீடு செய்வதற்கு தனியார்துறைக்கு அழைப்பு விடுக்கும் நோக்கில் இதன் சார்பில் முறையான சாத்தியத்தகவாய்வொன்றைச் செய்யும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.