• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறை றைகமவில் கைத்தொழில் மற்றும் தொழினுட்ப அபிவிருத்திக்கான உயர்வலயமொன்றை நிறுவுதல்
- நகர பிரதேசங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த கைத்தொழில் அபிவிருத்தியை பிராந்திய மட்டத்தில் விரிவுபடுத்துவதும் பிராந்தியத்திலுள்ள வலங்களின் மூலம் பெறுமதிசேர்க்கப்பட்ட உற்பத்திகளை செய்யும் கைத்தொழில்களை ஆரம்பிப்பதையும் உயர் சம்பளத்துடனான தொழில்களை கிராமிய பிரதேசங்களில் இலேசாக கிடைக்கச் செய்வதையும் நோக்காகக் கொண்டு கைத்தொழில் பேட்டைகளைத் தாபிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். இதன்கீழ் கிழக்காசிய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வலயங்களில் நிலவும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளுக்கு சமமான உட்கட்டமைப்பு வசதிகளையும் சேவைகளையும் கொண்ட 11 கைத்தொழில் மற்றும் தொழினுட்ப அபிவிருத்தி வலயங்கள் நாடு முழுவதும் தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதிலிருந்து அம்பாந்தோட்டை, றைகம, மஹஓய மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் நான்கு உயர் வலயங்களைத் தாபிப்பதற்குமாக 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடுகளின் மூலம் 500 மில்லியன் ரூபா குறித்தொதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, நுகர்வோர் மற்றும் புதிய தொழினுட்ப உற்பத்திகள் சார்பில் ஒதுக்கப்பட்ட தொழினுட்ப அபிவிருத்தி உயர் வலயமொன்றை களுத்துறை மாவட்டத்தின் றைகம பிரதேசத்தில் தாபிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.