• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கு உரியதான புவியியல் குறிகாட்டிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தைத் திருத்துதல்
- ஏதேனும் உற்பத்தியொன்றின் ஆரம்ப உற்பத்தி நாட்டுக்கு அல்லது பிரதேசத்திற்கு உரிய பண்பு மற்றும் மாதிரியை எடுத்துக் காட்டுவதன் காரணமாக ஏதேனும் பொருளொன்றின் அடையாளத்தினை வழங்கும் குறியீடொன்று அல்லது சுட்டெண் ஒன்று புவியியல் குறிகாட்டியென அழைக்கப்படுவதோடு, அது குறித்த பொருளின் ஆரம்ப உற்பத்தி நாட்டின் சொத்தாகும். இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினை வழங்கும் உற்பத்தியான இலங்கை தேயிலை மற்றும் இலங்கை கறுவா 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தின் மூலம் இலங்கையில் உற்பத்தியாகும் புவியியல் குறிகாட்டியாக இனங்காணப்பட்டுள்ளது. ஆயினும், இலங்கையில் புவியியல் குறிகாட்டிகளை பதிவு செய்வதற்குரிய சட்டக் கட்டமைப்பொன்று நடைமுறையில் இல்லாததன் காரணமாக உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இது சம்பந்தமாக ஆராய்ந்த உத்தியோகத்தர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இலங்கையில் முதல் உற்பத்தி செய்யப்பட்ட எந்தவொரு உற்பத்தியையும் பாதுகாப்பதற்கும் பதிவு செய்வதற்கும் அத்தாட்சிப்படுத்துவதற்குமான கட்டளை வழங்கும் அதிகாரம் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு கையளித்து 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்ததன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.