• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2013 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க திவிநெகும சட்டத்தை திருத்துவதற்கான சட்டம்
- குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்கை நிலையை உயர்த்தும் பொருட்டிலுள்ள சிறிய குழுக்கள், சங்கங்கள், பெரிய சங்கங்கள் மற்றும் இதற்குரியதான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் கிராமிய மட்ட உத்தியோகத்தர்களால் "திவிநெகும" என்னும் பெயருக்குப் பதிலாக "சமுர்த்தி" என்னும் பெயரை பயன்படுத்துமாறு செய்யப்படும் கோரிக்கைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, "திவிநெகும" என்பதற்குப் பதிலாக "சமுர்த்தி" என்பதை பதிலீடு செய்யும் பொருட்டு 2013 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க திவிநெகும சட்டத்தை திருத்தும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த நோக்கத்திற்காக சட்டவரைநரினால் வரையப்பட்ட திருத்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பின்னர், அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.