• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் நீர்கொழும்பு பிராந்திய பொறியியலாளர் அலுவலகத்துக்கு புதிய மூன்று மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
- 1987 ஆம் ஆண்டில் நீர்கொழும்பு பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்ட கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் பிராந்திய பொறியியல் அலுவலகத்தின் ஊடாக கம்பஹா, புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் 250 சதுர கிலோ மீற்றர் கரையோர வலயத்திற்குள் கரையோர பாதுகாப்பு பொறியியல் பணிகளுக்கான திட்டங்கள் தயாரித்து நடைமுறைப்படுத்துவதும் கரையோர வலயத்தின் அபிவிருத்தி பணிகளை ஒழுங்குறுத்துவதும் கட்டுப்படுத்துவதும் செய்யப்பட்டு வருகின்றது. இந்த அலுவலகம் அமைந்துள்ள கட்டடம் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பழைமைவாய்ந்ததோடு, தற்போதைய தேவைகளுக்கு அதில் காணப்படும் வசதிகள் போதுமானதாகவில்லை. இதற்கமைவாக 60 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டுச் செலவில் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் நீர்கொழும்பு பிராந்திய பொறியியலாளர் அலுவலகத்துக்கு புதிய மூன்று மாடி கட்டடமொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.