• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் மூன்றாவது தேசிய காலநிலை மாற்றம் பற்றிய தொடர்பாடல் அறிக்கையை தயாரிக்கும் கருத்திட்டம்
- இலங்கையினால் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைப்பு சமவாயமானது 1993 ஆம் ஆண்டு வலுவாக்கம் செய்யப்பட்டது. இந்த சமவாயத்தின் 12 ஆம் பிரிவு பிரகாரம் உறுப்புரிமை நாடுகளினால் காலநிலை மாற்றங்கள் சம்பந்தமான தகவல்கள் உள்ளடக்கப்பட்ட தேசிய தொடர்பாடல் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்பதோடு, அதற்கமைவாக இலங்கையினால் இதற்குரியதாக முதலாவது மற்றும் இரணடாவது தொடர்பாடல் அறிக்கைகள் முறையே 2000 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் UNFCCC செயலகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்ற சவால்களுக்கு முகங்கொடுக்க இயலுமாகும் வகையில் தாபன மற்றும் தொழினுட்ப ஆற்றல்களை மிகப் பயனுள்ள வகையில் பலப்படுத்தும் அத்துடன் உறுப்பு நாடொன்றாக இலங்கையினால் UNFCCC சமவாயத்தின் கீழ் கட்டுப்பட்டிருக்கும் உறுதிப்பாட்டை நிறைவேற்றி, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் உலகளாவிய சுற்றாடல் வசதிகளின் கீழ் வழங்கப்படும் மானியத்தை \பயன்படுத்தி காலநிலை மாற்றங்கள் பற்றிய மூன்றாவது தேசிய தொடர்பாடல் அறிக்கையை தயாரிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கும் அவ்வாறு தயாரிக்கப்படும் அறிக்கையை UNFCCC செயலகத்துக்கு சமர்ப்பிப்பதற்குமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.