• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் களஞ்சியசாலைத் தொகுதியொன்றை நிர்மாணித்தல்
- கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு அவர்களுடைய அறுவடைகளை களஞ்சியப்படுத்துவதற்கு தரத்தில் உயர்ந்த களஞ்சிய வசதிகளை ஏற்பாடு செய்யும் நோக்கில் ஆய்வுகூடத்துடனான அலுவலகக் கட்டடம், தங்குமிட வசதிகளுடனான கட்டடம், நீர்தாங்கி, டிரான்ஸ்போமர் அறை போன்றவற்றைக் கொண்ட சுமார் 32,000 சதுர அடி அளவில் களஞ்சிய தொகுதியொன்றை இந்த மாவட்டத்தினுள் நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.