• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்கலைக்கழகங்களில் நிருமாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
- களனி, கிழக்கு, ருகுணு மற்றும் இலங்கை பிக்குமார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவ சமுகத்திற்கு மிகச்சிறந்த கல்வியினைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த பல்கலைக்கழகங்களில் நிருமாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.