• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்கலைக்கழக மாணவிகளுக்கான விடுதி வசிகளை நிருமாணிக்கும் துரித கருத்திட்டம்
- அரசாங்க பல்கலைக்கழக முறைமையில் தற்போது கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அண்ணளவாக 94,000 ஆவதோடு, இதில் 52,800 பேர்களுக்குப் போதுமான விடுதி வசதிகளை வழங்குவதற்குத் தேவையான கட்டடங்கள் மற்றும் ஏனைய வசதிகளை அபிவிருத்தி செய்யும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை வருடாந்தம் சுமார் 10 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளமையினால் மேலும் விடுதி வசதிகளை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கமைவாக, மேலும் அண்ணளவாக 9,600 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகளை ஏற்பாடு செய்யக்கூடிய விதத்தில் 24 புதிய விடுதிகளை நிருமாணிக்கும் பணிகளை 1,430 மில்லியன் ரூபா கொண்ட செலவில் 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.