• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தலைமை வகிக்கும் காலப் பகுதிக்குள் கொழும்பு செயற்பாடு மற்றும் அபுதாபி கலந்துரையாடலுக்கான செயலகமொன்றையும் மதியுரைக் குழுவொன்றையும் தாபித்தல்
- ஆசிய நாடுகளுக்கான ஒப்பந்த ஆள்வலு பற்றிய வலய மதியுரைச் செயற்பாடொன்றாக 2003 ஆம் ஆண்டில் "கொழும்பு செயற்பாடு" தாபிக்கப்பட்டது. அதேபோன்று தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களினால் ஒப்பந்த தற்காலிக ஆள்வலுவைப் பயன்படுத்துவதற்குரிய தேசிய ரீதியிலான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பிலான தேவைகளுடன் ஒத்தியல்தல் வலுவாக்கம் செய்தல் சம்பந்தமாக உறுப்பு நாடுகளின் கூட்டுப்பொறுப்பினை ஏற்றுக் கொள்ளும் நோக்குடன் 2008 ஆம் ஆண்டில் "அபுதாபி கலந்துரையாடல்" தாபிக்கப்பட்டது. புலம்பெயர் ஊழியர்களின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக இலங்கையின் அர்ப்பணிப்பினை இனங்கண்டு, இரண்டு வருட காலத்திற்கு அபுதாபி கலந்துரையாடலின் அடுத்த தலைவர் பதவிக்கு இலங்கை ஏகமானதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த சர்வதேச சமவாயத்தின் பணிகளுக்கான வசதிகளை வழங்கும் நோக்கில் இலங்கை அபுதாபி கலந்துரையாடலில் தலைமை வகிக்கும் காலப்பகுதியில் கொழும்பு செயற்பாடு மற்றும் அபுதாபி கலந்துரையாடல் சார்பில் செயலகமொன்றையும் மதியுரைக் குழுவொன்றையும் தாபிக்கும் பொருட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.