• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விசேட பொருளாதார நிலையங்களின் உள்ளக வீதிகள் மற்றும் நுழைவுப் பாதைகளை பழுதுபார்த்தலும் நிருமாணித்தலும்
- மீகொட, நுவரெலியா, கெப்பிற்றிபொல மற்றும் வேயாங்கொட போன்ற விசேட பொருளாதார நிலையங்களின் உள்ளக வீதிகள் மற்றும் நுழைவுப் பாதைகளை நிருமாணித்தலும் வாகனத் தரிப்பிடம் மற்றும் கான்முறைமைகளை நிருமாணிக்கும் பணிகள் போன்றவற்றை 25.2 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ள செலவில் உரிய மாகாண வீதி அதிகாரசபையைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.