• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேரேவெவ புனரமைப்பு மற்றும் மீள் அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள சுமார் 120 ஹெக்டயார் நிலப்பிரதேசத்தில் பரவியுள்ள பேரேவெவ நகரத்திற்கு அழகினைச் சேர்ப்பதோடு, மழைநீர் வழிந்தோடுவதற்கு, ஓய்வாக இருப்பதற்கு அதேபோன்று உயிரின பல்வகைமைகள் சார்பிலும் இதன்மூலம் நன்மை கிடைக்கப் பெறுகின்றது. இந்த பேரேவெவ சுற்றுப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளின் போது வௌியேற்றப்படும் கழிவுநீர், சட்டவிரோதமாக பேரேவெவவுக்குள் தொடர்புபடுத்தப்பட்டுள்ள சாக்கடை முறைமை மற்றும் திண்ம கழிவுகள் காரணமாக இந்த நீர்வளம் மாசடைந்து வருகின்றது. அதேபோன்று அண்மித்த காணிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் முறையற்ற அபிவிருத்திப் பணிகளின் காரணமாக பல இடங்களில் குளக்கரைக்குச் செல்லும் பாதைகளுக்கு தடங்கலாகவுள்ளது. கொழும்பு நகரத்தினுள் மனங்கவரும் சூழலுடன் களியாட்ட வசதிகளையும் கொண்ட இடமொன்றாக பேரேவெவ மற்றும் அதுசார்ந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக உத்தேச பேரேவெவ மீள் அபிவிருத்திக் கருத்திட்டமானது 12,550 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.