• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் கியூபா குடியரசுக்கும் இடையில் விஞ்ஞான, தொழினுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பில் செய்துகொள்ளப்படும் உடன்படிக்கை
- இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் விஞ்ஞான, தொழினுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பினை ஊக்குவிக்கும் மற்றும் ஒத்தாசை நல்கும் நோக்கில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் கியூபாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவுள்ள "விஞ்ஞான, தொழினுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளின் ஒத்துழைப்புத் தொடர்பிலான உடன்படிக்கையில்" கைச்சாத்திடும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.