• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உயர்சக்தி பௌதிக விஞ்ஞானவியல் மற்றும் தொழினுட்பவியல் ஒத்துழைப்பு
- இலங்கை பல்கலைக்கழகங்களினாலும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களினாலும் அணுசக்தி ஆராய்ச்சி பற்றிய ஐரோப்பிய அமைப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் ஆராய்ச்சிக் கருத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்தும் இந்த அமைப்பில் இணை உறுப்பினர்களாக செயற்படும் பொருட்டு இலங்கை விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் தொழினுட்பவியலர்களுக்கு வாய்ப்பு வழங்கி, உயர்சக்தி பௌதிக விஞ்ஞானவியல் பற்றிய விஞ்ஞான மற்றும் தொழினுட்பவியல் ஒத்துழைப்பு தொடர்பிலான ஆர்வ வெளிப்படுத்தல் பத்திரமொன்றை இந்த அமைப்புடன் கைச்சாத்திடும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.