• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியம் 2016‑06‑05 ஆம் திகதியன்று வெடித்தமையால் அனர்த்தத்திற்குள்ளானவர்களுக்கு தொடர்ந்தும் சலுகைகளை வழங்குதல்
- கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்கை பிரதேச செயலக அதிகார பிரதேசத்தில் சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியம் வெடித்ததன் காரணமாக சேதமடைந்த வீடுகள் சார்பில் கொடுப்பனவுகளைச் செய்வதற்காக 359 மில்லியன் ரூபாவுக்குக் கூடுதலான தொகை ஏற்கனவே கொழும்பு மாவட்ட செயலகத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இருந்த உபகரணங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கும் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வர்த்தக நிலையங்களில் அவர்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை நடாத்திச் சென்ற வர்த்தகர்களுக்கு குறித்த வர்த்தக நிலையங்கள் பழைய நிலைக்கு மாறும் வரை தற்காலிகமாக பொது வர்த்தக நிலையமொன்றை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நிருமாணித்துக் கொடுப்பதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.