• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் வௌ்ளப்பெருக்கு மற்றும் சுற்றாடல் மாசடைதலை கட்டுப்படுத்துதல்
- அம்பாறை மாவட்ட கரையோரத்தில் அமைந்துள்ள சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் மக்கள், அண்மையிலுள்ள களப்பானது பெருக்கெடுப்பதனால் வருடாந்தம் ஏற்படும் வௌ்ளப்பெருக்குக் காரணமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உரிய கால்வாய் முறைமை இல்லாமை, களப்பில் இயற்கை சுற்றாடல் முறைமைக்கு தாக்கத்தைச் செலுத்தியுள்ள பல்வேறுபட்ட நீர் தாவரங்களினால் நீர் வழிந்தோடுதல் தடைப்பட்டுள்ளமை, பொது மக்களினால் களப்புக்கு அண்மையில் கழிவுகளை இடுதல் போன்ற இந்த நிலைமைக்குக் காரணமாய் அமைந்துள்ளது. இதற்கமைவாக களப்பின் இயற்கை அழகினை மேம்படுத்தி களப்பின் இருமருங்கிலும் குப்பைகூளங்களைப் போடாமல் பாதுகாத்து களப்பினை அபிவிருத்தி செய்தல் மற்றும் களப்புக்கு அண்மையில் வசிக்கும் 2,700 குடும்பங்களுக்குரிய 10,000 க்கும் மேற்பட்ட மக்களை வௌ்ளப்பெருக்கிலிருந்தும் கடல் அரிப்பிலிருந்தும் பாதுகாக்கும் நோக்கில் 162 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ள செலவில் களப்பைச் சுற்றிவர சுவரொன்றை நிருமாணிக்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.