• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச தொழில் அமைப்பின் கடலோடிகள் சார்ந்த துறைக்குரியதான சமவாயத்தை வலுவாக்கம் செய்தல்
- கடலோடிகளாகவுள்ள இலங்கையர்களுக்கான தொழில்வாய்ப்புகளை விரிவுபடுத்தும், அவர்களுடைய தொழில்நிலைமைகளை உயர்த்தும், கப்பல் தொழில்சார்ந்த ஏனைய நலன்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சர்வதேச தொழில் அமைப்பின் 2006 சமுத்திர தொழில் சமவாயத்தையும் 2003 ஆம் ஆண்டின் 185 ஆம் இலக்க கடலோடிகளின் அடையாள ஆவணங்கள் தொடர்பிலான சமவாயத்தையும் வலுவாக்கம் செய்வதற்கும் இந்த சமவாயங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டுத் தேவையான சட்ட ஏற்பாடுகளைச் செய்வதற்குமாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.