• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலாத்துறை மற்றும் கலாசாரம் சம்பந்தமான புலமைச் சொத்துக்கள் கருத்திட்டமொன்றை தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்துதல்
- நாட்டின் சுற்றுலா தொழிலையும் கலாசார மரபுரிமைகளையும் மேம்படுத்துவதற்கும் சுற்றுலா தொழில் சார்ந்த அபிவிருத்தி நோக்கங்களை அடைவதற்காகவும் ஒத்தாசை நல்கும் பொருட்டு புலமைச் சொத்துக்களின் பாவனை சம்பந்தமாக அறிந்து கொள்வதற்கும் ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்வதற்குமான நோக்குடன் உலக புலமைச் சொத்துக்கள் அமைப்பின் "சுற்றுலாத்துறை மற்றும் கலாசாரம் சம்பந்தமான புலமைச் சொத்துக்கள்" பற்றிய உத்தேச கருத்திட்டமொன்றை இலங்கையில் நடைமுறைப்படுத்து வதற்காக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபைக்கும் உலக புலமைச் சொத்துக்கள் அமைப்புக்கும் இடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினாலும் உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.