• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வறுமை ஒழிப்பு நிலைபெறுதகு மாதிரி கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டம்
- அமைச்சரவையினால் 2017 ஆம் ஆண்டை ஏற்கனவே "வறுமை ஒழிப்பு ஆண்டு" என பிரகடனப்படுத்தியுள்ளது. எவரேனும் ஆள் ஒருவரின் அல்லது குடும்பம் ஒன்றின் அவர்கள் பெறும் ஆகக்குறைந்த வருமானத்திலிருந்து மாத்திரம் தீர்மானிக்கப்படாததோடு, வறுமை நிலை சமூகத்துக்கு காட்டும் முக்கிய அலகொன்றாக உரியவர்கள் வசிக்கும் "வீட்டை" கவனத்திற்கு கொள்ளலாம். தொகைமதிப்பு, புள்ளிவிபர திணைக்களத்தினாலும் இலங்கை மத்திய வங்கியினாலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தரவுகள் மற்றும் தகவல்களுக்கு அமைவாக "மிகவும் வறுமை நிலையிலுள்ள மக்கள்" என இனங்காணப்பட்டுள்ள 165,000 பேர்கள் வசிப்பது குடிசை, சேரி வரிசை வீடுகள் அல்லது லயன் அறைகள் என்பவற்றிலாகும். அதேபோன்று வறுமை நிலையிலுள்ள சனத்தொகையில் 63 சதவீதமானோர் 400 சதுர அடிக்கும் குறைந்த வீடுகளில் வசிப்பதோடு, 10 சதவீதமானோர் மலசலகூட வசதிகள் இன்றியும் பெரும்பாலானோர் மின்சாரம் இல்லாமலும் வாழ்கின்றனர். இந்த நிலைமையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 2017 ஆம் ஆண்டில் வரும் வறுமை ஒழிப்பு ஆண்டிற்கு ஒருங்கிணைவாக "வறுமை ஒழிப்பு நிலைபெறுதகு மாதிரி கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டமொன்றை" நடைமுறைப்படுத்துவதற்கு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சினால் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களில் பெரும்பாலானோர் வசிக்கும் பிரதேசங்களை தழுவும் விதத்தில் மாதிரிக் கிராமம் ஒன்றுக்கு 550 சதுர அடி அளவிலான 25 வீட்டு அலகுகள் வீதம் மாவட்ட மட்டத்தில் 20 மாதிரி கிராமங்களும் 12,500 மொத்த வீட்டு அலகுகளை நிருமாணிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினாலும் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.