• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுவர் நோய் தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்து நடாத்திச் செல்வதற்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்தல்
- சிறுவர் நோய் எதிர்ப்புச் சக்திக்கான தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்குத் தேவையான Adsorbed Diptheria, Tetanus, Pertussis, Hepatitis B and Haemophilus Influenza Type “B” Conjugate Liquid Vaccine (Pentavalent) மருந்தளவு 10 கொண்ட புட்டிகள் 100,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.