• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மலையக மற்றும் கிராமிய பிரதேசங்களில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையை மேம்படுத்துதல்
- மத்திய, சப்பிரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் மலைகள் மற்றும் வளைவுகளுடனான பாதைகளிலும் அதேபோன்று ஏனைய மாகாணங்களின் கிராமிய ஒடுக்கப்பாதைகளிலும் கூடுதலான வசு வண்டிகளை நாளாந்தம் ஈடுபடுத்துவதன் மூலம் இந்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு மிகச் சிறந்த பயணிகள் சேவையொன்றை வழங்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபைக்கு 32-35 இருக்கைகள் கொண்ட 250 சிறிய பேருந்து வண்டிகளைக் கொள்வனவு செய்யும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.