• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெளிநாடுகளில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசு
- வௌிநாடுகளில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் சம்பந்தமாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசின் பிரகாரம் பெண் பணியாளர்கள் சம்பந்தமாக தற்போது பெறப்படும் குடும்ப பின்புல அறிக்கை, அதன் விடயநோக்கெல்லையை விரிவுபடுத்தி நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் தயார்செய்தல் மற்றும் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு வெளிநாடுகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் தகைமைகளை தீர்மானிக்கும் ஆவணமொன்றாக பயன்படுத்துவதற்கும் குடும்ப பின்புலம் மற்றும் தொழில் சார்பில் வெளிநாடு செல்வதற்கான தகைமையை மதிப்பிடும் பணி, உரிய பிரதேச செயலாளர் தலைமைத்துவத்திலும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாவல் உத்தியோகத்தர், சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் (வெளிநாட்டு தொழில்வாய்ப்பு) ஆகியோர்களைக் கொண்ட குழுவுக்கு கையளிப்பதற்கும் சவூதிஅரேபியாவுக்கான வயதெல்லையை 25 ஆகவும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கான வயதெல்லையை 23 ஆகவும் மத்தியகிழக்கு நாடொன்றல்லாத நாடுகளுக்கான வயதெல்லையை 21 ஆகவும் உள்ள வௌிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்களாகப் பணிபுரி வோருக்கான குறைந்த வயதெல்லையை மாற்றியமைக்காமல் பேணுவதற்குமாக வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.