• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் தோல்பொருள் கைத்தொழிலிற்கான கைத்தொழில் பேட்டையொன்றைத் தாபித்தல்
- இது ஏற்றுமதி சந்தையில் நுழைவதற்கு கூடுதலான வாய்ப்பு நிலவும் துறையொன்றாகையினால், தோல்பொருள் கைத்தொழில் முன்னுரிமை வழங்கி அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய தொழில் ஒன்றாக இனங்காணப்பட்டுள்ளதோடு, கணிசமான அளவு அந்நியசெலவாணியை ஈட்டிக் கொள்ளக்கூடியதும் அதேபோன்று நேரடியாக மற்றும் மறைமுகமாக 10,000 இற்கு மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் உருவாகக் கூடியதுமான நலன்களும் இதன் மூலம் கிடைக்கப் பெறும். இதற்கமைவாக, பாதணிகள் மற்றும் தோல்பொருள் கைத்தொழிலுக்குத் தேவையான அடிப்படை மூலப் பொருட்களை வழங்குதல், இந்த துறையின் சிறிய கைத்தொழில்களுக்கு வசதிகளை ஏற்பாடு செய்தல், மனிதவளங்கள் பயிற்சி, பொதுவசதிகள் மற்றும் விற்பனை வசதிகள் வழங்குதல் என்பவற்றுக்காக சுற்றாடல் நட்புறவுமிக்க கைத்தொழில் பேட்டையொன்றை அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக இந்த மாவட்டத்தின் வாகநேரி பிரதேசத்தில் தாபிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.