• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பின்லாந்து குடியரசு அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கை
- இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையில் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும், ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் நோக்கில் வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பின்லாந்து குடியரசு அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கைக்கு அரசாங்க மட்டத்தில் கைச்சாத்திடுவதற்கும் 2006 ஆம் ஆண்டில் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் 97(1) (அ) ஆம் பிரிவின் பிரகாரம் இது சம்பந்தமான பிரேரிப்பொன்றை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.