• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மற்றும் நோர்வே, சுவீடன், டென்மார்க் இராச்சியங்களுக்கு இடையே (தரப்பினர்கள்) விமான சேவைகள் கலந்துரையாடல்
- இலங்கை மற்றும் நோர்வே, சுவீடன், டென்மார்க் இராச்சியங்களுக்கு இடையே பிரயாணிகள் விமான சேவை செயற்பாடு மற்றும் விமான சரக்குகள் கையாள்கை பணிகளை நடாத்துவதற்காக உரிய நாடுகளின் விமான அதிகாரிகளினால் துருக்கி, அன்டாலியாவில் 2015‑10‑21 ஆம் திகதி நடாத்தப்பட்ட சிவில் விமான சேவைகள் கலந்துரையாடலின் போது உடன்பட்டுள்ள விமானசேவைகள் உடன்படிக்கையை முறையாக கைச்சாத்திடுவதற்கும் அதன் பின்னர் அதனை வலுவாக்கம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.