• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-10-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலநிலை மாற்றங்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய விதத்தில் உலர்வலய விவசாயிகளின் சக்தியை மேம்படுத்துதல்
- இலங்கை காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சீதோஷ்ணநிலை அதிகரித்தல், மழைவீழ்ச்சியில் எதிர்மாறான மாற்றங்கள் அதேபோன்று அதனுடன் இணைந்த வறட்சி மற்றும் வௌ்ளப்பெருக்குப் போன்ற இன்னல்களுக்கு அண்மைக் காலத்தில் முகம்கொடுத்து வருகின்றதோடு, உலர்வலய கிராமிய நீர்ப்பாசன கைத்தொழில் மற்றும் மழைநீர் மூலம் விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளர். அதேபோன்று உலர்வலத்தை கடுமையாகப் பாதித்துள்ள நீண்டகால சிறிநீரக நோய் இந்தவலயத்தின் 11 மாவட்டங்களுக்கும் உரிய 81 பிரதேச செயலகப் பிரிவுகளில் துரிதமாக அதிகரித்து வருவதைக் காட்டுகின்றது. இதற்கமைவாக, கிராமிய நீர்ப்பாசனத் தொழில் பெருமளவில் காணக்கிடைக்கும், சிறுநீரக நோய் மற்றும் வறுமை வியாபித்துக் காணப்படும் மல்வத்துஓயா, யான்ஓயா மற்றும் மீஓயா ஆகிய ஆற்றுப்படுகைகள் சார்ந்த நீர்தேக்கப் பிரதேசங்கள், வீட்டுத் தோட்டங்கள் நீர்ப்பாசன தொழில்கள் போன்றவற்றின் கூட்டு அபிவிருத்தியை ஏற்படுத்துதல் இந்த ஆற்றுப்படுகைகளுடன் இணைந்த அநுராதபுரம், பொலன்னறுவை, மன்னார், வவுனியா, திருகோணமலை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், உரிய பிரதேசங்களில் சமூகப் பங்களிப்புடன் நிறுவன மற்றும் ஒழுங்கமைப்பு கட்டமைப்புகளைப் பலப்படுத்துதல் போன்றவற்றை நோக்காகக் கொண்டு கூட்டு நீர் முகாமைத்துவத்தின் மூலம் காலநிலை மாற்றங்களுக்கு முகம் கொடுக்கும் கருத்திட்டமொன்றை ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் பற்றிய கட்டமைப்பு சமவாயத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள பசுமை காலநிலை நிதியத்தின் மூலம் வழங்கப்படவுள்ள 38.087 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கொடையினைப் பயன்படுத்தி 2017 ஆம் ஆண்டிலிருந்து 07 வருட காலத்திற்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.