• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் நிருமாணிப்பு பணிகள்
- இலங்கையில் இரண்டாவது பெரிய மூன்றாம் நிலை சுகாதார சேவை நிறுவனமொன்றான கண்டி போதனா வைத்தியசாலை மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,000 புற்றுநோயாளிகளுக்கு சேவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வைத்தியசாலையில் படுக்கைகளின் எண்ணிக்கையை 340 ஆல் அதிகரிப்பதற்கும் புற்றுநோயாளிகளுக்கு மிக சிறந்த சுகாதார சேவையொன்றை வழங்கும் நோக்கில் கண்டி போதனாவைத்தியசாலைக்கு 11 மாடிகளைக் கொண்ட புற்றுநோய் சிகிச்சை நிலையமொன்றை நிருமாணிக்கும் பணிகள் 2013 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்டதோடு, அதன் மீதி நிருமாணிப்பு பணிகளை (கட்டம் - III) பூர்த்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.