• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா, கஜபாபுர பிரதேசத்திலிருந்து நெடுங்கேணி நகரம் வரை செல்லும் பிரதான வீதியை மேம்படுத்தல்
- முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு மாவட்டத்தின் பிரதான நகரமான முல்லைத்தீவு நகரத்திற்கு செல்வதற்குள்ள குறுகிய வழி வெலிஓயா, கஜபாபுரவிலிருந்து நெடுங்கேணி நகரம் வரை செல்லும் 11.1 கிலோ மீ்ற்றர் நீளமான பிரதான வீதியாகும். தற்போது பாரிய அளவில் சேதமடைந்துள்ள இந்த வீதியை அபிவிருத்தி செய்வதன் மூலம் வெலிஓயா பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதுபடுத்தும். இதற்கமைவாக இந்தப் பாதையை 466.3 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ள செலவில் மேம்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.