• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தகவல், தொடர்பாடல் தொழினுட்ப தேசிய திறமுறை: 2016-2018 - இலங்கை தகவல், தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மை - 20 மில்லியன் ரூபாவை விஞ்சிய கருத்திட்டங்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
- டிஜிட்டல் தொழினுட்ப நலன்களை நாட்டின் சகல மக்களுக்கும் வழங்கும் நோக்கில் 2016-2018 மூன்று வருட காலப்பகுதிக்குள் நடைமுறைபடுத்த வேண்டிய அபிவிருத்தி கருத்திட்டங்கள் பல இலங்கை தகவல், தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மையினால் இனங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக "தேசிய டிஜிட்டல் மயமாக்கல்" மற்றும் "நனசல விருத்தி செய்தல்" போன்ற நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் 2016 ஆம் ஆண்டு சார்பில் அங்கீகரிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடுகளை பயன்படுத்தி 40 கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.