• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் நடாத்தப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாடு
- ஊழல் அற்ற சமூகமொன்றை உருவாக்கும் பொருட்டு அரசியல் வாதிகள், அரச மற்றும் தனியார் துறையின் உயர் அதிகாரிகள், இயைபுள்ள ஏனைய தரப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறியசெய்வித்தல் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாதொழித்தல் தொடர்பிலான கலந்துரை யாடல்களை சமூகத்தில் உருவாக்கும் நோக்கத்தினை அடிப்படையாக் கொண்டு, ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாடொன்றை இலங்கையில் நடாத்தும் பொருட்டு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, இதற்கமைவாக இந்த மாநாட்டை ஊழல் எதிரப்புக்கான சருவதேச தினத்திற்கு ஒருங்கிணைவாக "ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாட்டை" 2016 திசெம்பர் மாதம் 09 ஆம் திகதியன்று சுமார் 700 உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் நடாத்தும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.