• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்கள் / முன்பள்ளி பாடசாலை பிள்ளைகளின் போசாக்கு நிலைமையை மேம்படுத்துதல்
- போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குழைந்தைகளின் போசாக்கு நிலைமையை மேம்படுத்தும் மற்றும் உள்ளூர் பால் உற்பத்தி விவசாயிகளை பலப்படுத்தும் நோக்கில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்களில் / முன்பள்ளி பாடசாலைகளில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு பால் கிளாஸ் ஒன்றை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமானது 2006 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மீளாய்வு செய்யும் போது பால் கிளாஸ் ஒன்று வழங்குவதன் மூலம் மாத்திரம் முன்பள்ளி பாடசாலை பிள்ளைகளின் போசாக்குத் தேவையை நிறைவு செய்ய முடியாதென எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதற்கமைவாக முன்பிள்ளை பருவ குழந்தைகளின் போசாக்கின்மையை குறைக்கும் நோக்கில் 2-5 வயதிற்கு இடைப்பட்ட குறைந்த எடையுடைய ஆகக்கூடிய நூற்றுவீதமான பிள்ளைகள் உள்ள சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் பிரிவினை தெரிவு செய்து, குறித்த பிரிவிலுள்ள முன்பிள்ளை பருவ அபிவிருத்தி நிலையங்களிலுள்ள பிள்ளைகளுக்கு பால் கிளாஸ் ஒன்று வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பதிலாக பூரண போசாக்கு மிக்க காலை உணவினை வாரத்தில் ஐந்து நாட்களும் வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை 2017 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் (திருமதி) சந்திராணி பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.