• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வவுனியா உத்தேச பொருளாதார மத்திய நிலையம் சார்பில் காணியொன்றை உடைமையாக்கிக் கொள்ளல்
- வவுனியா நகரத்துக்கு அண்மையில் விசேட பொருளாதார நிலையமொன்றை நிருமாணிப்பதற்காக 2016 வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகள் மூலம் 200 மில்லியன் ரூபா குறித்தொதுக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார மத்திய நிலையத்தை நிருமாணிப்பதற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களின் உடன்பாட்டின் மீது தெரிவு செய்யப்பட்டுள்ள மூன்று முரிப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் மதகுவைத்த குளம் கிராமத்திலுள்ள 2.5 ஏக்கர் காணித்துண்டை இயைபுள்ள நோக்கத்திற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு குறித்தொதுக்கும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.