• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை உணவு விஞ்ஞான மற்றும் தொழினுட்ப நிறுவகத்தை தாபித்தல்
- “இலங்கை உணவு விஞ்ஞான தொழினுட்ப நிறுவகமானது இலங்கையில் உணவு உற்பத்தி மற்றும் பதனிடல் பற்றிய கைத்தொழிலுக்குத் தேவையான நவீன தொழினுட்ப அறிவினை வழங்குதல், உணவுகளின் தரம் மற்றும் பாதுகாப்பினை விஞ்ஞான ரீதியில் சருவதேச தரங்களுக்கு அமைவான விதத்தில் மேம்படுத்துதல் மற்றும் உள்நாட்டு உணவு கைத்தொழிலை சருவதேச ரீதியில் போட்டிகரமான மட்டத்திற்கு கொண்டுவருதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. இலங்கை உணவு விஞ்ஞான மற்றும் தொழினுட்ப நிறுவகத்தின் செயற்பாட்டினை பலப்படுத்துவதற்காக இந்த நிறுவனத்தை பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் தாபிக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.