• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்
- இலங்கையில் 676 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் இருக்கின்றதோடு, அந்த ஒரு கடவைக்கு மூன்று காவலர்கள் வீதம் கடவை காவலர்கள் 2,028 பேர்கள் இருக்க வேண்டிய போதிலும் பாதசாரிகள் பயணிகளின் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பினை வழங்கி சேவையில் ஈடுபட்டுள்ளது 1,953 புகையிரத கடவை பாதுகாவலர்கள் ஆவர். அரசாங்க ஊழியர்களுக்குரிய சம்பளம், ஊதியங்கள் மற்றும் ஏனைய சிறப்புரிமைகள் இன்றி நாளொன்றுக்கு 250/- ரூபா வீதம் மாதாந்தம் 7,500/- ரூபாவைக் கொண்ட கொடுப்பனவொன்றைப் பெற்றுக் கொண்டு கௌரவ சேவையொன்று அவர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தக் கொடுப்பனவானது போதாதென குறித்த கடவை காவலர்கள் செய்துள்ள கோரிக்கையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் புகையிரத கடவையொன்று சார்பில் மூன்று காவலர்களுக்கு தற்போது மாதாமொன்றுக்கு ஒதுக்கப்படும் 22,500/- ரூபாவை ஆள் ஒருவருக்கு வழங்கப்படும் படியொன்றாக அல்ல புகையிரத கடவையொன்றுக்கான படியொன்றாக வழங்குவதற்கும் இந்த படியை புகையிரத கடவை காவலர்களுக்கிடையில் பகிர்ந்தளிப்பதற்கு பொருத்தமான உள்ளக வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கும் நீண்டகால தீர்வாக கூடுதலாக விபத்துகள் நிகழும் இடங்களையும் வளைவுகள் கூடிய பாதுகாப்பற்ற இடங்களையும் முன்னுரிமை வழங்கி இந்த குறித்த இடங்களில் ஒலியெழுப்பும் மின்சார மணிகளையும் மின்சார சைகைகளையும் கொண்ட புகையிரத கடவைகளை துரிதமாக பொருத்துவதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.