• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இளைஞர் அபிவிருத்தியுடன் தொடர்புடையதாக கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துதல்
- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையில் இளைஞர் அபிவிருத்தியுடன் தொடர்புடையதான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, பாகிஸ்தான் அரசாங்கத்தினால் அதற்காக பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள இளைஞர் அபிவிருத்தியுடன் தொடர்புடையதான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கையின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சும் பாகிஸ்தானின் மாகாணங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.