• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க மற்றும் பகுதி அரசாங்க நிறுவனங்களின் கட்டடங்களை சுற்றாடல் நட்புறவுமிக்க பசுமைக் கட்டடங்களாக நிருமாணித்தலும் பேணுதலும்
- எமது முன்னோர்கள் அவர்களுடைய வாழ்விடங்களை அயனமண்டல காலநிலைக்கு ஏற்றவாறு மிக எளிமையான வடிவமைப்புடன் மிக உயர்ந்த தரத்தில் நிருமாணித்திருந்த போதிலும், அண்மைக்காலத்தில் இலங்கையின் காலநிலை பற்றி கவனம் செலுத்தாது வெ ளிநாட்டு கட்டட நிருமாணிப்புகளின் மாதிரிகளுக்கு அமைவாக நிருமாணிக்கப்பட்டமையினால் தற்போதுள்ள பெரும்பாலான கட்டடங்களில் சூரிய ஔி மற்றும் இயற்கை காற்று உரிய முறையில் கிடைக்காத செயற்கை வெ ளிச்சமும் குளிரூட்டிகளின் மீதும் தங்கியிருக்கும் கட்டடங்களாக இருப்பதன் காரணமாக சுற்றாடல், பொருளாதாரம் அதேபோன்று தொழினுட்ப பிரச்சினைகள் பல எழுந்துள்ளன. வலுசக்தி அடங்கலாக ஏனைய வளங்களை முறையாகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறையுடன் சுற்றாடல் நட்புறவுமிக்க பொருட்கள் மற்றும் வழிமுறைகளை பயன்படுத்தி நிருமாணிக்கப்படும் கட்டடங்கள் "பசுமை கட்டடங்கள்" என பொதுவாக அழைக்கப்படுவதோடு, நிலைபேறுடைய அபிவிருத்தியை நோக்கி செல்கையில் பசுமை கட்டடங்களுக்கான வழிகாட்டல்களை பின்பற்றுவது மிக முக்கியமானதாகும். இதற்கமைவாக அரசாங்க நிறுவனங்களின் சகல கட்டடங்களும் நிலைபேறுடைய மற்றும் சுற்றாடல் நட்புறவுமிக்க மட்டத்திற்கு கொண்டுவந்து, இந்த கட்டடங்களை பயன்படுத்துபவர்களுக்கு இலகுவாக மற்றும் ஆரோக்கியம் மிக்க வகையில் பேணும் நோக்கில் சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவினால் உரிய அமைச்சுகளின் உடன்பாட்டுடன் தயாரிக்கப்பட்டுள்ள "பசுமை கட்டட வழிகாட்டல்கள்" என்பதை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.