• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திருகோணமலை கடற்படை கப்பல் தளத்தில் இறங்குதுறையொன்றை நிருமாணித்தல்
- உலகின் ஆழமான இயற்கை துறைமுகங்களில் ஒன்றானதும் ஆசியாவில் இரண்டாவது ஆழமானதுமான திருகோணமலை துறைமுகமானது பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக உரிய முறையில் அபிவிருத்தி செய்வதற்கு இயலாமற் போயுள்ளது. இலங்கை கடற்படையின் பெரிய முகாமானது இங்கு அமைந்துள்ளதோடு, இங்கு அமைந்துள்ள கப்பல் தளமானது இலங்கை கடற்படையின் கிழக்கு படைப்பிரிவினதும் கடற்படை மற்றும் சமுத்திர விஞ்ஞான பீடத்தினதும் மனையிடமுமாகும். பெரிய கப்பல்களுக்கு நங்கூரமிடும் வசதிகளை ஏற்பாடு செய்யக்கூடிய இறங்குதுறையொன்றை இந்த கப்பல் தளத்தில் நிருமாணிக்கும் பணிகள் 1990 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் பல்வேறுபட்ட காரணங்களினால் இந்த நிருமாணிப்பு பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை கடற்பரப்பில் கண்காணிப்பு ரோந்து நடவடிக்கைளை அதிகரிக்கும் நோக்கில் மிகப்பெரிய நான்கு கப்பல்களை 2017-2019 காலப்பகுதிக்குள் சுவீகரித்துக் கொள்வதற்கு இலங்கை கடற்படையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமையினால், அத்தகைய பாரிய கப்பல்களுக்கு நங்கூரமிடும் வசதிகளை ஏற்பாடு செய்வதற்கு இயலுமாகும் வகையில் 220 மீற்றர் நீளமும் 20 மீற்றர் அகலமும் கொண்ட திருகோணமலை கடற்படை கப்பல் தளத்தில் உத்தேச இறங்குதுறை நுழைவு பாலத்துடன் நிருமாணிக்கும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.