• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அனுபவம்மிக்க நிபுணத்துவ மருத்துவர்களுக்கு 63 வயதுவரை சேவை காலத்தை நீடித்தல்
- நாட்டிலுள்ள மருத்துவமனைகளின் கிளினிக் பிரிவுகளில் 1,164 விசேட மருத்துவர்களுக்கான பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றது. நடைமுறையிலுள்ள வழிமுறையின் கீழ் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு கணிசமான காலம் எடுக்கும் என்பதனாலும் அவர்களுடைய சேவைக்காலப் பகுதிக்குள் பெற்றுக் கொண்ட அனுபவத்தின் அடிப்படையிலும் தற்போதுள்ள கட்டாயமாக ஓய்வுபெறும் வயதெல்லைக்கு அப்பால் தொடர்ந்தும் பயனுள்ள சேவையை வழங்குவதற்கு அவர்களுக்குள்ள ஆற்றலை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, கிளினிக் பிரிவுகளில் சேவையாற்றும் அனுபவம்மிக்க நிபுணத்துவ மருத்துவர்களின் கட்டாயமாக ஓய்வுபெறும் வயதெல்லையை 63 வயது வரை நீடிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.