• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெறுமதி சேர்க்கப்பட்ட வரியைத் திருத்துவதற்கான சட்டமூலம்
- 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் பிரகாரம் 2016-03-04 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமும் 2016-06-15 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரமும் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரி சட்டத்தின் கீழ் பெறுமதிசேர்க்கப்பட்ட வரி சம்பந்தமாகவுள்ள ஏற்பாடுகளை திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைவாக, பெறுமதி சேர்க்கப்பட் வரி திருத்தத்திற்குரியதாக ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சட்டமூலத்திற்குப் பதிலாக பின்வரும் பிரேரிப்புகளை உள்ளடக்கி திருத்தி யமைக்கப்பட்ட பெறுமதிசேர்க்கப்பட்ட வரி (திருத்த) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

(i) பெறுமதி சேர்க்கப்பட் வரி நூற்றுவீதத்தை 15 சதவீதமாக பேணுதல்;

(ii) பெறுமதி சேர்க்கப்பட் வரி சார்பில் பதிவுசெய்யப்படுவதற்கு தற்போது ஏற்புடையதாகும் மொத்த வருமானமானது வருடத்திற்கு 15 மில்லியன் ரூபா அல்லது காலாண்டுக்கு 3.75 மில்லியன் ரூபாவாகவுள்ள எல்லையை வருடத்திற்கு 12 மில்லியன் ரூபாவாக அல்லது காலாண்டுக்கு 3 மில்லியன் ரூபாவாக குறைத்தல்;

(iii) பின்வரும் பொருட்கள் மற்றும் சேவைகள் மீது பெறுமதி சேர்க்கப்பட் வரியினை விதித்தல்:

* ஆண்டுக்கான மொத்த வருமானம் 50 மில்லியன் ரூபா (காலாண்டுக்கு 12.5 மில்லியன் ரூபா) அல்லது அதற்கு கூடுதலான மொத்த அல்லது சில்லறை வர்த்தகம்;

* நோய் நிர்ணய பரிசோதனைகள் (diagnostic tests), குருதி சுத்திகரிப்பு (dialysis) மற்றும் மருத்துவ ஆலோசனை சேவைகள் உள்வாங்கப்படாத வெ ளிநோயாளர் சேவைகள் தவிர ஏனைய தனியார் சுகாதார சேவைகள்;

* தொலைத்தொடர்புச் சேவை;

* புகையிலை உற்பத்திகள்;

* சீனி அல்லது பிற இனிப்பு கலவை பொருட்கள் சேர்க்கப்பட்ட பால்மா;

* இலங்கை விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வெ ளியே அமைந்துள்ள விமான நிலையமொன்றுக்கு செல்லும் விமானப் பயணிகளின் பயணச்சீட்டுக் கட்டணம்;

(iv) 2015‑11‑01 ஆம் திகதிக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திறமுறை அபிவிருத்தி கருத்திட்டங்கள் அல்லது 2016‑10‑01 ஆம் திகதிக்கு முன்னர் விற்பனை ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்ட அல்லது அன்றைய திகதியில் கருத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ள கருத்திட்டங்கள் தவிர கருத்திட்டத்தின் முதலீடானது 5மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமான கருத்திட்டங்கள் ஊடாக செய்யப்படும் வதிவிட வசதிகள் வழங்குதல், குத்தகைக்களித்தல் அல்லது வாடகைக்கு விடுதல் தொடர்பிலான சேவைகளுக்கு தற்போது நிலவும் பெறுமதி சேர்க்கப்பட் வரி விலக்களிப்பை வரையறுத்தல்;

(v) இலங்கை முதலீட்டு சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட கம்பனிகளினால் உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும் தைத்த ஆடையொன்று / துண்டொன்று மீது அறவிடப்படும் வரியை 75/- ரூபாவாக அதிகரித்தல்.