• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் அதன் துணைப் பிரிவுகளை கொண்டு செல்லும் பொருட்டு ஹொரண சொரணவத்த காணியை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்காக சுவீகரித்தல்
- வெலிக்கடை சிறைச்சாலை, சிறைச்சாலை வைத்தியசாலை, பெண்களுக்கான காவறை, சிறைச்சாலை உத்தியோகபூர்வ விடுதிகள் அடங்கலாக அதன் ஏனைய பிரிவுகளை தாபிப்பதற்காக தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான ஹொரணையிலுள்ள 28 ஏக்கர் விஸ்திரணமுள்ள சொர்ணவத்த என்னும் காணியை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கையளிப்பதற்கும் வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள 38.5 ஏக்கர் விஸ்தீரணமுடைய சிறைச்சாலைகள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியை நகர அபிவிருத்தி நோக்கங்களுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிப்பதற்குமாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.