• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படப் பிரிவுகள் சம்பந்தமான ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் நோக்கில் இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஊடகத்துறையின் வெற்றிகரமான அனுபவங்கள் மற்றும் தொழினுட்பம் ஆகியவற்றை இருநாடுகளுக்குமிடையில் பரிமாறிக் கொள்ளும் நோக்கில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கும் பங்களாதேஷ் மக்கள் குடியரசின் தகவல் அமைச்சுக்கும் இடையில் வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படப் பிரிவுகள் சம்பந்தமான ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.