• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தைத் திருத்துதல்
- இயற்கை மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக உருவாகும் அனர்த்த நிலைமைகளை முகாமிக்கும் பொருட்டு இயங்கும் நிறுவன கட்டமைப்புகளாக "அனர்த்த முகாமைத்துவம் பற்றிய தேசிய சபை" மற்றும் "அனர்த்த முகாமைத்துவ நிலையம்" என்பன 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் 2005 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதோடு, அனர்த்த முகாமைத்துவம் என்னும் விடயத்திற்கு புறம்பான அமைச்சொன்று 2010 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அண்மைக்காலத்தில் அனர்த்தங்கள் மிக துரிதமாக அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளதோடு, மேற்போந்த சட்டத்தின் கீழ் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும் செயற்பாடுகளையும் நிறைவேற்றும் போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கும் முகங்கொடுக்க நேரிடுகின்ற நடைமுறை ரீதியிலான கஷ்டங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை சிறந்த ஒருங்கிணைப்புடனும் ஒத்துழைப்புடனும் நிறைவேற்றுவதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தைத் திருத்தும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.