• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காட்டு யானைகளினால் விளைவிக்கப்படும் உயிர் மற்றும் சொத்துக்கள் சார்ந்த சேதங்களுக்கான நட்டஈட்டுத் தொகையை அதிகரித்தல்
- மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் காட்டு யானைகளினால் விளைவிக்கப்படும் சேதங்களுக்காக வழங்கப்படும் நட்டஈடு தொகையானது இறுதியாக திருத்தப்பட்டுள்ளது 2004 ஆம் ஆண்டிலாகும். இதற்கமைவாக வருடாந்தம் செலுத்தப்படும் மொத்த நட்டஈட்டுத் தொகையானது 25 மில்லியன் ரூபாவுக்கும் 35 மில்லியன் ரூபாவுக்கும் இடைப்பட்டதாகும். இந்த நட்டஈடு தொகையை அதிகரித்து, காட்டு யானைகள் தாக்கியமையினால் நிகழும் மரணமொன்றின் போது 200,000/- ரூபாவும் முழுமையாக இயலாமைக்கு ஆளானவிடத்து (தற்போது நடைமுறையிலுள்ள வயதெல்லையைக் கருத்திற் கொள்ளாது) பொதுவாக 200,000/- ரூபாவும் காயங்களுக்கு 75,000/- ரூபாவும் வீடு மற்றும் சொத்துக்களின் சேதங்களுக்கு 100,000/- ரூபாவும் நட்டஈடாக வழங்குவதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதனை அங்கீகரிக்கும் போது நிகழும் தாமதங்களை குறைப்பதற்காக நட்டஈடு செலுத்துவதனை மாவட்ட செயலாளரின் தலைமையிலான குழுவொன்றுக்கு கையளிப்பதற்கும் நட்டஈடு வழங்குவது சம்பந்தமாகவுள்ள இந்த குழுக்களின் தீர்மானங்கள் தொடர்பில் திருப்தியுறாத தரப்பினர்களின் மேல்முறையீடுகளை பரிசீலனை செய்யும் பொருட்டு வனவுயிர் பணிப்பாளர் அதிபதியின் தலைமையில் மேன்முறையீட்டுக் குழுவொன்றைத் தாபிப்பதற்குமாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.