• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் துரித பொருளாதார மாற்றங்களை உருவாக்குதல்: மத்திய நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவப் பிரிவொன்றைத் தாபித்தல்
- நாடுமுழுவதும் துரித பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துதல் மற்றும் நாட்டில் பொருளாதாரத்தை நிறைபேறுடைய சமூக பொருளாதார சந்தையொன்றை நோக்கி மாற்றும் நோக்கத்தை வெற்றி கொள்வதற்காக அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்கும் குறித்த செயற்பாடுகள் பற்றி சீர்செய்யும் நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுக்கும் பொருட்டும் புறம்பான பிரிவொன்றை தாபிப்பது மிக முக்கியமானதாகும். இதற்கமைவாக இந்த நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு இலங்கையில் மத்திய நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவப் பிரிவொன்றைத் தாபிப்பதற்காக மலேசியா போன்ற துரிதமாக மாற்றங்களுக்கு உட்பட்டு வரும் பொருளாதாரத்தில் சமமான மத்திய மட்ட நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவ பிரிவினைத் தாபித்ததில் அனுபவமும் ஆற்றலும் கொண்ட வெளிநாட்டு மதியுரை கம்பனியொன்றான ஐக்கிய அமெரிக்க குடியரசின் மெக்கன்சி நிறுவனத்தின் ஒத்தாசையைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.