• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க தனியார் கூட்டு வழிமுறையின் கீழ் புதிய உள்ளக நீர் வழி போக்குவரத்து முறைமையொன்றை நடைமுறைப்படுத்துதல்
- நகரத்தின் வாகன நெரிசல் படிப்படியாக அதிகரித்து வரும் நிலைமையின் கீழ் பேருந்துகள் அல்லது புகையிரத போக்குவரத்தினை போதுமான அளவில் சேவையில் ஈடுபடுத்த முடியாத பிரதேசங்கள் சார்பில் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் வழிகளை அடிப்படையாகக் கொண்ட கடுகதியானதும் சிக்கனமானதுமான போக்குவரத்துச் சேவையொன்றை வழங்கமுடியுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக கொழும்பு கிழக்கு - மேற்கு மற்றும் வடக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களை இணைத்து முறையான ஒருங்கிணைப்பு வழியாக தற்போதுள்ள கால்வாய் முறைமையையும் கடலையும் பயன்படுத்துவதன் மூலம் வினைத்திறன் மிக்க போக்குவரத்து சேவையொன்றை ஏற்பாடு செய்யலாமென்பதோடு, வௌ்ளவத்தை - பத்தரமுல்லை (கால்வாய் ஊடாக), கோட்டை - யூனியன் பிளேஸ் (பேரே வெவ ஊடாக), மட்டக்குளிய - ஹங்வெல்ல (களனி கங்கை ஊடாக) ஆகிய உள்ளக நீர்வழிப் போக்குவரத்து பாதைகள் மூன்றையும் இதற்காகவுள்ள பாதைகளாக மாநகர போக்குவரத்து குழுவினால் இனங்காணப்பட்டுள்ளது. பொருத்தமான தனியார் முதலீட்டாளர் ஒருவரை இனங்கண்டு அரசாங்க தனியார் கூட்டு வழிமுறையின் கீழ் புதிய உள்ளக நீர்வழி போக்குவரத்து முறைமையொன்றை கட்டியெழுப்புவது சம்பந்தமான சாத்தியத்தகவாய்வொன்றை செய்யும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.