• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிலோவேனியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அரசியல் கலந்துரையாடல் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
- சிலோவேனியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அரசியல், பொருளாதார, கொன்சியூலர், தொழினுட்ப, விஞ்ஞானம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு அடங்கலாக இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும், பலப்படுத்தும், மற்றும் விரிவுப்படுத்தும் நோக்கில் சிலோவேனியா குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையே மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கை 2016 செப்ரெம்பர் மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் 08 ஆம் திகதிவரை மேற்கொள்ளும் அவருடைய சிலோவேனியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.