• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெளிநாட்டலுவல்கள் அமைச்சினை வேறு இடத்திற்கு கொண்டு செல்லல்
- வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தற்போது நடாத்திச் செல்லப்படும் கொழும்பு கோட்டைப் பிரதேசத்திலுள்ள குடியரசுக் கட்டடம் பிரித்தானிய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த காலப்பகுதியில் நிருமாணிக்கப்பட்ட ஒன்றாவதோடு, அது பாதுகாக்கப்பட வேண்டிய உரிமையொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சினை வேறு இடத்திற்கு கொண்டு செல்வது அத்தியாவசியமாவதோடு, இந்த அமைச்சுக்காக புதிய கட்டடமொன்றை நிருமாணிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ள கொழும்பு, ஜாவத்தை பாதையிலுள்ள சுமார் இரண்டு ஏக்கர் காணித்துண்டை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு குறித்தொதுக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.